ரேசன் கடையை முற்றுகையிட்ட அதிமுகவினர்

ரேசன் கடையை முற்றுகையிட்ட அதிமுகவினர்
X
பூதப்பாண்டி
பூதப்பாண்டி தெற்கு ரத வீதியில் இரண்டு ரேசன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் பொருட்கள் வாங்கும் பொழுது கைரேகை பதிவு செய்யும் முறை இருந்து வருகிறது.       தற்போது உள்ளமுறைப்படி இந்த கடையில் எத்தனை பொருட்கள் வாங்குகிறோமோ அத்தனை முறையும் கைரேகைபதிவு செய்தால் தான்பொருட்கள் வாங்க முடியும் என்றும் இதனால் பயனாளிகளுக்கு கால தாமதம் ஏற்ப்படுவதோடு அலைகழிக்கப் பட்டு வருகிறார்கள் எனவும், இதனை கண்டித்து தோவாளை ஒன்றிய அதிமுகசெயலாளரும்(தெற்கு) ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவருமானமுத்துக்குமார் தலைமையில் அதிமுகவினர் நேற்று ரேசன்கடையினை திடீர்முற்று கைப்போராட்டம் நடத்தினர்.       அண்ணா தெழிற்சங்க செயலாளர் அன்னை ஏகதாஸ் , அ தி மு க ஒன்றிய பொருளாளர் (வ) வெங்கடேஷ்ஆனந்த், ராஜேந்திரன்மற்றும் அதி முவினர் கலந்துக்கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த முறையினை மாற்றி பழைய முறையினை பின்பற்ற வேண்டும் என தோவாளை தாசில்தார் கோலப்பனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
Next Story