கூட்டாலுமூடு : கோயிலில் பந்தல் கால் நாட்டு

கூட்டாலுமூடு : கோயிலில் பந்தல் கால் நாட்டு
X
பத்ரேஸ்வரி அம்மன் கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் நடத்தக்கூடிய கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கும் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வரும் மே மாதம் நான்காம் தேதி துவங்கி பத்து நாட்கள் நடக்கிறது. இதற்கான பந்தல்கால் நாட்டு விழா கோயில் தந்தரி சங்கரன் நம்பூதிரி தலைமையில் நடந்தது. கோயில் மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் போற்றி, கீழ் சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரி பூஜை செய்தனர். தலைவர் குமரேசதாஸ், செயலாளர் ராஜகுமார்,பொருளாளர் முருகன் துணைத் தலைவர் சந்தோஷ் குமார், இணைச் செயலாளர் சதீஷ்குமார், பந்தல் உரிமையாளர் சந்திர மோகன் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story