வாகனங்களுக்கான ஷெட்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

வாகனங்களுக்கான ஷெட்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
X
ஈரோடு சின்ன மார்க்கெட்டில் வாகனங்கள் நிறுத்துவதற்கான ஷெட் அமைக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு மேலான நிலையில், அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 150 குப்பை அள்ளும் வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் மழையில் நனைவதாலும், வெயிலில் காய்வதாலும் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இதனால், இந்த வாகனங்களை நிறுத்துவதற்காக, ஈரோடு சின்ன காய்கறி மார்க்கெட்டில் உள்ள காலியிடத்தில், மாநகராட்சி சார்பில் ரூ.97 லட்சம் மதிப்பில் ஷெட் அமைக்கும் கட்டுமான பணி கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பணிகள் முடிந்து தற்போது 6 மாதங்களுக்கு மேலாகும் நிலையில் அது பூட்டியே கிடக்கிறது.எனவே, ஷெட்டை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘ஷெட்டின் முழு கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’ என்றார்.
Next Story