கோயில் முன் வைக்கப்பட்டுள்ள பேரிக்காட்டில் கரண்ட் ஷாக் பக்தர்கள் அதிர்ச்சி

கோயில் முன் வைக்கப்பட்டுள்ள பேரிக்காட்டில் கரண்ட் ஷாக் பக்தர்கள் அதிர்ச்சி
X
கோயில் முன்பாக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் எர்த் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அதிர்ச்சி உடனடியாக சரி செய்த கோயில் நிர்வாகம்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் குண்டம், தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் உள்ள கம்பத்துக்கும் புனித நீர் ஊற்றவும், மாரியம்மனை வழிபடவும் தினசரி திரளான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால், பக்தர்கள் கோயிலுக்குள் வருவதை முறைப்படுத்த கோயில் நுழைவு பகுதியில் பேரி கார்டு (இரும்பு தடுப்பு) வைக்கப்பட்டு இருந்தது. நேற்று மதியம் 12:25 மணியளவில் பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றவும், சுவாமியை தரிசித்து வணங்கவும் காத்திருந்தனர். அப்போது, மாநகரில் சாரல் மழை பெய்து நின்று இருந்தது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் பேரி கார்டில் கை வைத்தனர். அவர்கள் அனைவரும் நொடி பொழுதில் கையை வேகமாக எடுத்தனர். பேரி கார்டில் ஷாக் அடிப்பதாக தெரிவித்தனர். வழி நெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கோயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். அலங்காரத்துக்காக வைக்கப்பட்டு இருந்த மின் விளக்கு ஒயர் இணைப்பில் மழை நீர் பட்டதால் பேரி கார்டில் மின்சார ஒயர் உரசி எர்த்தானது தெரியவந்தது. பக்தர்களின் கூச்சலிட்டதை கேட்டு அங்கு வந்த கோயில் நிர்வாகம், எலக்ட்ரீசியஷனை அழைத்து வந்து பரிசோதித்து பழுதை நீக்கினர். கோயில் செயல் அலுவலர் அஞ்சுகம் கூறியதாவது:மாநகரில் பெய்த மழையால், அருகேயுள்ள டிரான்ஸ்பார்மரில் மழை நீர் தெரித்து அதில் பழுது ஏற்பட்டது. அப்போது அலங்காரத்துக்காக வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. பல்புகள் செயல் இழந்தன. இதனால் பேரி கார்டில் எர்த் ஏற்பட்டுள்ளது. உடனடியாக எலக்ட்ரீசியனை அழைத்து வந்து பரிசோதித்து விட்டோம். பிரச்னையை உடனடியாக அணுகி சரி செய்துள்ளோம். இவ்வாறு செயல் அலுவலர் அஞ்சுகம் தெரிவித்தார்.
Next Story