ஈரோட்டில் வாட்டர் ஏடிஎம் பொருத்த முடிவு

ஈரோட்டில் வாட்டர் ஏடிஎம் பொருத்த முடிவு
X
பொதுமக்களின் தாகம் தீர்க்க இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வாட்டர் ஏடிஎம் பொருத்த முடிவு
கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், பொதுமக்களின் தாக்கம் தீர்க்கும் வகையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வாட்டர் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிப்ரவரி மாத இறுதி முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருவதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரம், குமிலன் குட்டை, திண்டல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில், வாட்டர் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், மண் பானையில் குடிநீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் தனலட்சுமி அறிவுறுத்தலின் பேரில், காலை மற்றும் மாலை நேரங்களில் கண்காணித்து, மாநகராட்சி ஊழியர்கள் பானைகளில் நீரை நிரப்பி வருகின்றனர்.
Next Story