வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அதனை திரும்ப பெற வலியுறுத்தி தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து சட்ட மசோதாவை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்து இரு அவைகளிலும் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது இந்நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்தங்களில் இஸ்லாமியர்கள் பாதிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும் சட்டத்திருத்தம் இருப்பதாகவும் இதனை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார் இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்று வக்பு வாரிய சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி என ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதன் ஒரு பகுதியாக தேனி பங்களாமேடு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தினர் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு சேர்ந்த அமைப்புகள் உடன் பங்கேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பி பெறக் கோரி வக்பு வாரிய சட்டதிருக்கு எதிராக வாசகங்கள் இடம் பெற்ற பதாகைகளை கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story