மறைமலையடிகள் பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சார கூட்டம்.

மதுரை மறைமலையடிகள் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது
மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள மாநகராட்சி மறைமலை அடிகளார் பள்ளியில் இன்று (ஏப் 4) மதுரை நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் விமலா அவர்களின் அறிவுரையின்படி தலைமை காவலர்கள் அருணா தேவி மற்றும் கற்பகம் ஆகியோர் மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து விளக்கமாக உரையாற்றினார்கள். உடன் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி போதை தடுப்பு ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் உமா மற்றும் ஆசிரியர்கள் சந்தான லட்சுமி, சகாய ஜெயராணி, விஜய், கனகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்
Next Story