முதியோர் அமர்விடப் பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும் : மேயர்

முதியோர் அமர்விடப் பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும் : மேயர்
X
முதியோர் அமர்விடப் பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும் என மேயர் ஜெகன் பெரியசாமி தகவல் தெரிவித்தார்.
தூத்துக்குடி ஒன்றாம் கேட் பகுதியில் முதியோர் அமர்விடப் பூங்கா பணிகள் தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஒன்றாம் கேட் பகுதியில் பணிகள் ஆரம்பமாக போகும் முதியோர் அமர்விடப் பூங்காவனையும், கோபால்சாமி தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் தூர்ந்து போயிருப்பதாக வந்த தகவல்களையடுத்து அதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. வரும் நாட்களில் பணிகள் ஆரம்பமாகும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story