முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்காக விண்ணப்பித்துள்ள முன்னாள் படை வீரர்களின் தொழில் விண்ணப்பங்கள் குறித்த மாவட்ட தேர்வு குழு கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 12 முன்னாள் படைவீரர்கள் பல்வேறு தொழில்கள் தொடங்க விண்ணப்பித்திருந்தார்கள். இந்த விண்ணப்பங்களை மாவட்ட தேர்வு குழு மூலம் தேர்வு செய்திடும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் முதலாவது மாவட்ட தேர்வு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்காக விண்ணப்பித்துள்ள முன்னாள் படை வீரர்களின் தொழில் விண்ணப்பங்கள் குறித்த மாவட்ட தேர்வு குழு கூட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், நடைப் பெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்காக விண்ணப்பித்துள்ள முன்னாள் படை வீரர்களின் தொழில் விண்ணப்பங்கள் குறித்த மாவட்ட தேர்வு குழு கூட்டம் இன்று நடைப் பெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 78- வது சுதந்திர தினத்தன்று (15.08.2024) சுதந்திர தின உரையின் போது முன்னாள் படைவீரர் நலனுக்காக அறிவிக்கப்பட்ட “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கு தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கிகடன் உதவியும், இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியமும் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படும் எனவும், இத்திட்டத்தின் கீழ் கடன் பெறுவோருக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அளிக்கப்படும் என அறிவித்தார்கள். இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 12 முன்னாள் படைவீரர்கள் பல்வேறு தொழில்கள் தொடங்க விண்ணப்பித்திருந்தார்கள். இந்த விண்ணப்பங்களை மாவட்ட தேர்வு குழு மூலம் தேர்வு செய்திடும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் முதலாவது மாவட்ட தேர்வு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் தொடங்க விண்ணப்பித்திருந்த முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டனர். எந்த வகையான தொழில்கள், எவ்வளவு மானியத்தொகை, திட்ட தொகை மற்றும் பங்குத்தொகை உள்ளிட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரிவாக கேட்டறிந்து திட்ட அறிக்கையினை ஆய்வு செய்தார். பின்னர் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் பயன், முக்கியத்துவம் குறித்து முன்னாள் படை வீரர்கள் அவர்தம் சார்ந்தோர்களிடம் தெரிவித்து புதிய தொழில்கள் தொடங்குவதற்கு தெரியப்படுத்தி உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர்(பொ) கலையரசி காந்திமதி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் லி.சாகுல் ஹமீது, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜி.பரத்குமார் சிறு குறு தொழில் சங்க பிரதிநிதி குமார், மாவட்ட தொழில் மைய உதவி மேலாளர் விஜய்ஆனந்த், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழக கிளை மேலாளர் ஆர்.கலாவதி மற்றும் முன்னாள் படை வீரர்கள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story