கோவை: கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் !

X

கோழிப் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சூலூரில் தொடர் போராட்டம் கோவை மாவட்டம், சூலூர் அருகே ஜே.கிருஷ்ணாபுரம் மற்றும் வஞ்சிபுரம் கிராமங்களுக்கு அருகில் 1.14 லட்சம் கோழிகள் வளர்க்கும் பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஐக்ந்றி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோழிப் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சூலூரில் தொடர் போராட்டம் கோவை மாவட்டம், சூலூர் அருகே ஜே.கிருஷ்ணாபுரம் மற்றும் வஞ்சிபுரம் கிராமங்களுக்கு அருகில் 1.14 லட்சம் கோழிகள் வளர்க்கும் பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஐக்ந்றி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Mandira Giri Moorthy Poultry Farms என்ற நிறுவனம் 114000 முட்டை கோழிகளை வளர்க்கும் வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.கிருஷ்ணாபுரம் மற்றும் வஞ்சிபுரம் கிராம மக்கள் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் அனைத்துக் கட்சியினர், விவசாய அமைப்புகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஈசன் முருகசாமி இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய ஈசன் முருகசாமி, விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் இத்தகைய பெரிய கோழிப் பண்ணை அமைப்பது முற்றிலும் தவறானது என்று கூறினார்
Next Story