ராமநாதபுரம் திருத்துவசமாக மங்களநாத சுவாமி கும்பாபிஷேகம் நடைபெற்றது

திரு.உத்தரகோசமங்கை மங்கலநாதசுவாமி மங்கலேஸ்வரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திரு. உத்தரகோசமங்கையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த மிகப்பெரிய சிவாலயமாக விளங்கிவருகிறது. இத்திருத்தலத்தில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் மங்கலநாதசுவாமி மங்கலேஸ்வரியம்மன் கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் வெகு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் மரகத நடராஜர் சன்னதி, மங்கலேஸ்வரியம்மன் தாயார் சன்னதி, மரகத நடராஜர் சன்னதி மற்றும் ராஜகோபுரத்திற்கும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை பரம்பரை சமஸ்தான தேவஸ்தான அரங்காவலர் ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் கொடியசைத்து தொடங்கிய பின்பு கோபுர கலசம் மற்றும் மூலவர் சன்னதிகளின் கலசங்களில் சிவாச்சாரியர்கள் 4 நாட்கள் யாகசாலையில் வைத்து பூஜைசெய்த புனித நீரைஊற்றினர். இதன்பிறகு தீபாராதனைகள் நடந்தது.இவ்விழவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கலசத்தில் ஊற்றிய புனிதநீரை ட்ரோன்மூலமாக தெளிக்கப்பட்டது. விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் காலோன் அறிவித்தார். இவ்விழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த சிவாலய கும்பாபிஷேகத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். ஒரு சிலர் சாம்பிராணி புகை ஏற்படுத்த நேர்த்திகடன் செலுத்தினர். மேலும் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தலவிருட்சமாக இலந்தை மரம் இங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகளை திவான் பழனிவேல் பாண்டியன் செய்திருந்தார்.
Next Story