ராமநாதபுரம் மீனவர் பெண்கள் புகார் மனு

X

சாத்தகோன்வலசை ஊராட்சி உட்பட்ட பிள்ளை மடம் கிராம கடற்கரையில் பாசி வளர்க்க பயன்படுத்தப்படும் மூங்கில் திறுடு (ராட்) போய்விட்டதாக மீனவப் பெண்கள் புகார்
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரையில் மீனவப் பெண்களுக்கு மத்திய மாநில அரசு சார்பிலும், சில தனியார் அமைப்புகளும் இணைந்து பாசி மற்றும் பாசி விதைகள் இலவசமாகவும் மாநியமாகவும் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பெரும் பங்காற்றி வருகின்றனர் . இந்நிலையில் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தகோன் வலசை ஊராட்சி உட்பட்ட பிள்ளை மடம் கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட சுய உதவி குழு பெண்களான மீனவப் பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் அமைப்பான அக்குவா அக்ரி சார்பில் பாசி மற்றும் பாசி விதைகள், மூங்கில் கம்புகளை ( ராட்) வழங்கி உள்ளனர் .இவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் காலையில் நடந்து சென்று கடலில் கடற்கரை ஓரத்தில் மூங்கில் மரங்களை சதுரமாக கட்டி அதில் வலைகளை பின்னி அதன் மேல் பாசி விதைகளை தூவி உணவு பாசி வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் பிள்ளை மடம் அருகில் உள்ள ஊர்களில் இருந்து கடற்கரை ஓரத்தில் மீன் பிடிக்கவும், வலைகளை பயன்படுத்தி இழுவை மீன்கள் பிடிக்கவும் மீனவர்கள் வருவது வழக்கம் .அவர்கள் பிள்ளை மடம் மீனவப் பெண்களின் பாசி வளர்க்கும் மூங்கில் கம்புகளை உடைத்து பாசிகளை கடலில் வீசி விட்டு அந்த மூங்கில் கம்புகளை எடுத்து வேறு இடங்களுக்கு போய் பரண் போட்டு வருவதாக மீனவப் பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர் .மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மூங்கில் கம்புகளை காணவில்லை எனவும் எங்களின் வாழ்வாதாரம் உயர்த்துவதற்கு அரசு சார்பில் எங்களுக்கு உதவினாலும் கூட இது போன்ற மீனவர்கள் வந்து எங்களின் தொழிலை நசுக்கி வருகின்றனர். ஆதலால் எங்களுக்கு பாதுகாப்பும் அரசு சார்பில் உதவியும் கேட்டு புகார் தெரிவித்துள்ளனர்.
Next Story