சேலத்தில் வீட்டின் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

X
சேலம் நியூ பேர்லான்ஸ் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயேந்திரன் தொழிலாளி. இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்துமா பிரச்சனை இருந்தது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற விஜயேந்திரன் மீண்டும் திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கு இடையில் இன்று காலை வீட்டின் அருகே உள்ள மரத்தில் விஜயேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

