கரூரில் நடைபெற்ற சமூக நீதிக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்த்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

கரூரில் நடைபெற்ற சமூக நீதிக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்த்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.
கரூரில் நடைபெற்ற சமூக நீதிக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்த்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் சமூகநீதி கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வீரப்பறையர் பேரவையின் தலைவர் ரவிச்சந்திரன் பறையர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில இந்திய மருதநாயகம் மக்கள் கட்சியின் தலைவர் தமிம் அன்சாரி, இந்திய சோசியலிச கட்சியின் தலைவர் திவாகர், மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கோமதி மூவேந்தர் புலிப்படை கோமதி, மூவேந்தர் புலிப்படை மாவட்டச் செயலாளர் காசிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் தாயகம் மக்கள் கட்சியின் தலைவர் தமிழ்ச்செல்வன் சிறப்பு உரையாற்றினார். இன்றைய கூட்டத்தில் நிலம், அரசியல் அதிகாரம் என்ற இரு பார்வையில் தமிழகத்தில் உள்ள ஆண்ட மற்றும் ஆளும் அரசியல் கட்சிகள் எவ்வாறு தாழ்த்தப்பட்ட தலித் சமுதாயத்தை வஞ்சித்து வருகிறார்கள் என்பது குறித்து விளக்கி பேசினார். மேலும் இந்த கூட்டத்தில், பட்டியல் பழங்குடி மக்களுக்குரிய 12.50 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய அளவில் தொடர்ச்சியான வேலை திட்டங்களை முன்னெடுப்பது என்றும், ஜூலை 7 ல் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் பிறந்தநாளில் சென்னையில் மாநாடு நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சமூக நீதிக்காக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கைது கண்டித்தும், சிறை சென்று வந்த ரவிச்சந்திர பறையர்க்கு கூட்டமைப்பு சார்பாக வாழ்த்தியும், கரூர் ஜவுளி தொழிலாளர்களுக்கு தினக்கூலியை ரூபாய் 250 லிருந்து 400 ஆக உயர்த்திட வலியுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story