மயானத்தில் மக்கள் காத்திருப்பு போராட்டம்.

மதுரை அருகே மயானத்தில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூரில் 1 பிட் கிராமத்தில் கிராம நிர்வாக 1 அதிகாரியாக கந்துவேல் என்பவர் பணிபுரிந்து வந்த நிலையில் அப்பகுதி ஆதி திராவிட மக்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் குறைதீர்க்கும் முகாமில் சந்தித்து விஏஓ முறைகேடாக மயான பகுதியில் பட்டா வழங்கியும் தனது மனைவி பெயரில் 18 சென்ட் இடம் மற்றும் எட்டு பட்டாக்கள் வாங்கியுள்ளார். மேலும் தனது அண்ணன் மகன் பெயரில் பட்டா வழங்கியுள்ளார். மேலும் பலருக்கு பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக பட்டா வழங்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தனர் அதன் பேரில் கடந்த 28. 3. 2024 அன்று வருவாய் கோட்டாட்சியர் ராஜகுரு விசாரிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் ராஜகுரு விசாரணை செய்து விஓ கந்துவேல் கடந்த ஏப்ரல்1ம் தேதி முதல் உச்சபட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் விஏஓ கந்துவேல் 15 நாள் விடுமுறை அளித்து சென்றதால் தற்போது புதிதாக பொறுப்பு விஏஓ ராஜாங்கம் பொறுப்பு தலையாரி முருகன் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் நிலையூர் 1பீட் மயானத்தில் இன்று (ஏப்.4) காத்திருப்பு போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். இதை அறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
Next Story