காவலன் செயலி அறிமுகம் செய்த போலீசார்
Komarapalayam King 24x7 |4 April 2025 4:56 PM ISTகுமாரபாளையம் ஜே.கே.கே நடராஜா கல்லூரியில் போலீசார் சார்பில் காவலன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே.கே நடராஜா கல்லூரியில் போலீசார் சார்பில் காவலன் செயலி அறிமுகம் செய்யும் நிகழ்வு தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு டி.எஸ்.பி. கிருஷ்ணன் பங்கேற்று, காவலன் செயலி குறித்து பேசினார். இவர் பேசியதாவது: காவலன் செயலி, மாணவ, மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாகும். இதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தனிமையில் செல்லும் போது, வம்பு செய்யும் நபர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள உதவியாக இருக்கும். தங்கள் வாகனம் திடீரென்று பழுதாகி நின்றாலும், இதனை பயன்படுத்தினால், தக்க உதவி கிடைக்கும். திடீரென்று மருத்துவ உதவி வேண்டும் என்றாலும் இந்த செயலி மூலம் ஆம்புலன்ஸ் வரவழைக்க முடியும். இதனை ஒவ்வொருவரும் தங்கள் உறவினர், நண்பர்களுக்கு அனுப்பி பதிவிறக்கம் செய்து கொள்ள வையுங்கள். போலீஸ் என்றும் உங்கள் துணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இதில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, கல்லூரி நிர்வாக அலுவலர் ரங்கராஜன், உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story


