கிருஷ்ணகிரி விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி முகாம்.

கிருஷ்ணகிரி விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி முகாம்.
X
கிருஷ்ணகிரி விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி முகாம்.
கோடை விடுமுறையை முன்னிட்டு ஆண்டுதோறும் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு, 12 நாட்கள் வீதம் 5 கட்டங்களாக நீச்சல் பயிற்சி வழங்கப்படுகிறது. முதல் கட்ட பயிற்சி முகாம் நேற்றுதொடங்கியது. இதை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் தொடங்கி வைத்தார். முதல் கட்ட பயிற்சியில், 11 மாணவர்களும், 7 மாணவிகளும், முறையாக பயிற்சி பெற்ற அரசு சார்பில் நிய மிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்கள் மூலம் காலை, மாலை இரு வேலை பயிற்சி பெற்று வருகின்றனர்.
Next Story