மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் நீர் வரத்து அதிகரித்து கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

வெள்ள பெருக்கு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பகல் 11 மணி முதல் கனமழை பெய்து வந்த நிலையில் அருவிக்கு நீர்வரத்து திடீரென அதிகரிப்பதைக் கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தால் வனத்துறையினர் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் வெளியேற்றி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மேலும் அருவிக்க நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உள்ளதால் பிற்பகல் 2 மணி முதல் சுற்றுலா பயணிகளை குளிக்கவும், அருவிக்குச் செல்ல தடை விதித்து வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
Next Story