கருப்பு பேட்ச் அணிந்து தொழுகை மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

கருப்பு பேட்ச் அணிந்து தொழுகை மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்
X
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் இஸ்லாமியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து தொழுகை மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் காந்திஜி புது ரோட்டில் உள்ள மக்கா மசூதியில் இன்று 04.04.25 வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிறப்பு தொழுகைக்கு வருகை தந்த இஸ்லாமியர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ச் அணிந்து தொழுகையில் கலந்து கொண்டனர். பின்னர் தொழுகை முடிந்து பள்ளிவாசல் முன்பு மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்பொழுது சிதைக்காதே சிதைக்காதே சிறுபான்மை மக்களின் வாழ்க்கை சிதைக்காதே வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு திருத்த சட்ட மசோதாவை வாபஸ் வாங்கு போன்ற வாசகங்கள் அடங்க பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர் மத்திய அரசு வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
Next Story