லஞ்சம் வாங்கிய விஏஓ, உதவியாளர் சஸ்பெண்ட்

X
திங்கள் நகர் பேரூராட்சி சடவிளை பகுதியை சேர்ந்தவர் கட்டிடக் காண்ட்ராக்டர் ஆறுமுகம் (55). இவர் சொத்து மதிப்பு சான்றிதழ் கோரி தலக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். அப்போது கிராம அலுவலர் அமல ராணி மற்றும் கிராம உதவியாளர் பேபி ஆகியோர் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ. 3000 லஞ்சம் கேட்டனர். இது குறித்து ஆறுமுகம் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் மறைந்து இருந்து கண்காணித்து லஞ்சம் வாங்கிய போது அமல ராணி, பேபி ஆகி 2 வரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தக்கலை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் லஞ்சம் வாங்கி கைதான கிராம நிர்வாக அலுவலர் அமலா ராணியை சஸ்பெண்ட் செய்து பத்மநாபபுரம் உதவி கலெக்டர் வினய் குமார் மீனா உத்தரவிட்டுள்ளார். இதேபோல் கிராம உதவியாளர் பேபியை சஸ்பெண்ட் செய்து கல்குளம் தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.
Next Story

