ஓடைப்பட்டியில் இருசக்கர வாகன விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்

ஓடைப்பட்டியில் இருசக்கர வாகன விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்
X
வழக்கப்பதிவு
தேனி மாவட்டம், வெள்ளையம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் (23). இவர் ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில் ஒரு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஏப்.3) அவரது பைக்கில் அப்பிபட்டி கண்மாய் அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த யோகேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு.
Next Story