இரட்டை கொலை வழக்கில் திருவள்ளுவர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஆவடியில் இரட்டை கொலை வழக்கில் வேலூரை சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்தது திருவள்ளூர் மகிளா நீதிமன்றம்.கூடுதலாக 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆவடி நரிகுறவர் காலனியை சேர்ந்த 25 வயது நரிகுறவர் பெண்ணை கடந்த 2019 ஜனவரியில் நள்ளிரவில் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வேலூரை சேர்ந்த மற்றொரு நரிகுறவரான வீரா(25) என்பவர், அந்த பெண் மற்றும் அவரது 3 வயது குழந்தை ஆகியோர் மீது அம்மி கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இது குறித்து ஆவடி காவல் துறையினர் வீராவை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில், நீதிபதி ரேவதி முன்பு வந்த விசாரணையை சாட்சிகளின் அடிப்படையில் ஊர்ஜிதப்படுத்தி இரட்டை கொலை மற்றும் கற்கழிப்புக்காக வீராவுக்கு ஆயுள் தண்டனையும் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ₹11000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.இதனைதொடர்ந்து வீராவை காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.
Next Story




