வடக்கு பாளையத்தில் டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.இளைஞர் உயிரிழப்பு.

வடக்கு பாளையத்தில் டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.இளைஞர் உயிரிழப்பு.
வடக்கு பாளையத்தில் டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.இளைஞர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணியன் மகன் ராஜ்குமார் வயது 27. இவர் ஏப்ரல் 3-ம் தேதி காலை 8.30 மணி அளவில், திருச்சி -கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் வடக்கு பாளையம் அருகே சென்ற போது, எதிர் திசையில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே குழுமணி பகுதியைச் சேர்ந்த கருணாகரன் மகன் ரஞ்சித் வயது 28 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கே பி எஸ் என்கிற தனியார் பேருந்து ராஜ்குமார் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜ்குமாரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் அறிந்த ராஜ்குமாரின் தந்தை மணியன் வயது 73 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ராஜ்குமாரின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக தனியார் பேருந்தை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்தனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story