தேன்கனிக்கோட்டைபேட்டராய சாமி கோவில் தேர்த்திருவிழா ஆலோசனை கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேட்டராய சாமி கோவில் தேர்த்திருவிழா ஏப்- 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதை ஒட்டி அன்று தேவையான ஏற்பாடுகளைப் பற்றி வட்டாச்சியர் கங்கை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் குடிநீர், மின்சாரம், கழிவறை, போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
Next Story

