நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
X
திண்டுக்கல்லில் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் முத்துசாராதா, தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து நாம் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்காமல் மரங்களை அழித்துவிட்டு வீடுகளை கட்டி வருகிறோம்,. நம் தலைமுறையினருக்கு எதனை கொடுக்கிறோம், மகனுக்கும் மகளுக்கு வீடுகளை கட்ட வேண்டும், வங்கிகளில் வைப்புத்தொகை செய்ய வேண்டுமென நினைக்கிறோம் என்றும், வரும் காலங்களில் உயர்நீதிமன்ற உத்தரவு படி 1000 மரக்கன்றுகளை நெடுஞ்சாலைகளில் நட திட்டமிள்ளோம் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் வேல்முருகன், போக்சோ நீதிபதி, விஜயகுமார், குடும்ப நீதிமன்ற நீதிபதி, சரண், மகிளா நீதிபதி, கனகராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், தீபா, முதன்மை சார்பு நீதிபதி, கோகுலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிபதி, திரிவேணி, செயலாளர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ரெங்கராஜ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி, சௌமியா மேத்யூ குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1, ஆனந்தி, நீதித்துறை நடுவர் எண் 3 உள்ளிட்ட ஏனைய நீதிபதிகள் மற்றும் கந்தசாமி, உதவி திட்ட அலுவலர், ரமேஷ், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர், வனத்துறை அலுவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சுமார் 50 மரக்கன்றுகளை மரக்கன்றுகளை நட்டனர்.
Next Story