பாப்பம்பாளையம் மாகாளியம்மன் பொங்கல் திருவிழா

பாப்பம்பாளையம் மாகாளியம்மன் பொங்கல் திருவிழா
X
வெள்ளகோவில் அருகே பாப்பம்பாளையம் மாகாளியம்மன் பொங்கல் திருவிழா
வெள்ளகோவில் பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவிலில் பூச்சாற்றுதல், அம்மன் அழைப்புடன் திருவிழா தொடங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்குச் சென்று தீர்த்தக் காவடி எடுத்து வந்தனர். நேற்று பால்குடம் அழைப்பு, பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு, மாவிளக்கு பூஜை, சேற்று வேஷம், கும்ப வழிபாடு நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை கும்பம் கங்கையில் விடப்பட்டு பொங்கல் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை பாப்பம்பாளையம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story