நாகர்கோவில் மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

X
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசோி 12 வது வாா்டு வணிகர் தெரு அரசுதொடக்கப்பள்ளி பகுதியில் மழைகாலங்களில் கழிவுநீா் ஓடையிலிருந்து துா்நாற்றமடிக்கும் கழிவுநீா் மற்றும் கழிவு பொருட்களோடு ஆறு போல் செல்லுகிறது. கழிவுநீா்ஓடைகளை சுத்தம் செய்யாததால் மணல் கழிவு பொருட்கள் நிறைந்து மழைகாலங்களில் இதுபோன்று ஏற்படும் அவலநிலைகளால் நடக்க முடியாமல் வீட்டின் முன்பக்கம் குவியும் மணல் மற்றும் கழிவு பொருட்களை மாற்றுவதே எங்கள் வேலையாக இருக்கிறது என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி ஆணையர் உாியநடவடிக்கை எடுத்திட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

