பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு - திருச்சி ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு - திருச்சி ரெயில் சேவையில் மாற்றம்
X
திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் அறிவிப்பு
திருச்சி ரெயில்வே கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரெயில் சேவைக ளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி வழியாக செல்லும் சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16127) சென் னையில் இருந்து வழக்கமாக காலை 10.20 மணிக்கு புறப்படும். வரு கிற 9 மற்றும் 16-ந்தேதி 1.30 மணி நேரம் தாமதமாக காலை 11.50 மணிக்கு புறப்படும். இதேபோல் திருச்சியில் இருந்து சென்னை வரை செல்லும் திருச்சி சென்னை சோழன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22676) திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும் ரெயில் வருகிற 9 மற்றும் 16-ந்தேதிகளில் 1 மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்லும். மேலும் போத்தனூர் மற்றும் கோவை வடக்கு பிரிவுகளுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. அதன் படி, பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16844) வருகிற 10-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை போத்தனூர், இருகூர் வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி வந்தடையும். இந்த ரெயில் கோவை, கோவை வடக்கு, பீள மேடு உள்ளிட்ட ரெயில் நிலையங்களுக்கு செல்லாது. இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
Next Story