ஒசூர்: லஞ்சம் வாங்கிய முத்திரை ஆய்வாளர் கைது.

ஒசூர்: லஞ்சம் வாங்கிய முத்திரை ஆய்வாளர் கைது.
X
ஒசூர்: லஞ்சம் வாங்கிய முத்திரை ஆய்வாளர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ்தி சாலையில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை முத்திரை ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்த நாகராஜன்(60) முத்திரை பணியாளராக வேலை செய்கிறார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன், 50, முத்திரை ஆய்வாளராக உள்ளார். வரும் 30 ஆம் தேதி அன்று நாகராஜன் ஓய்வு பெற உள்ள நிலையில் ஓய்வு கால பண பலன்களுக்கான பட்டியலை தயார் செய்து வழங்குமாறு முத்திரை ஆய்வாளர் தமிழ்செல்வனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து நாகராஜன் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுறுத்தல் படி நாகராஜன் 30 ஆயிரம் ரூபாயை தமிழ்செல்வனிடம் கொடுத்த போது தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், தமிழ்செல்வனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Next Story