குமரி : தெருநாய்கள் கட்டுபடுத்த வேண்டும்

X
குமரி சமூக ஆர்வலரும், குலசேகரபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவருமான ஒசரவிளை செல்வக்குமார் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்குஅனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: . தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் நிகழ்ந்த நாய்க்கடி சம்பவங்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் என தமிழக சுகாதாரத்துறை கூறுகிறது. 2024ல் 47 பேர் ரேபிஸ் தொற்றால் இறந்து உள்ளனர். மேலும் அதிகரித்து வரும் தெருநாய்கள் மக்களை பாதிக்கும் பிரச்னையாக மாறி வருகிறது பெரும்பாலான இருசக்கர வாகன விபத்துக்களுக்கும் தெரு நாய்களே காரணமாகின்றது. குமரி மாவட்டத்தில் மட்டும் கடந்த 2021ல் 5655 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். 2022ல் 11 ஆயிரத்து 771 பேரும் 2023ல் 13 ஆயிரத்து 993 பேரும், 2024ல் 16 ஆயிரத்து 64 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. அதுபோல் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 533 பேர் நாய்கடியினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பூதப்பாண்டி சாலையில் சுற்றிதிரிந்த நாய் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது. தெங்கம்புதூர் பகுதியில் ரூ 28 லட்சத்தில் புதிதாக விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னும் தெருநாய்களின் எண்ணிக்கை குறைந்ததாக இல்லை. எனவே குமரி மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரையும் பாதிப்பிற்கு உள்ளாக்குவதோடு, சாலை விபத்துக்களுக்கும், உயிர் இழப்புகளுக்கும் காரணமான அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுபடுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மனுவில் உள்ளார்
Next Story

