கலவை அருகே கால்நடை மருத்துவமனை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

X
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியில் உள்ள சென்னசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாந்தாங்கல், மேல் நெல்லி உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவில் விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கால்நடைகளையும் அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். அடிக்கடி கால்நடைகள் நோயால் பாதிக்கப்படும்போது அவற்றுக்கு சிகிச்சை அளிக்கவும், செயற்கை கருவூட்டல் செய்வதற்கும் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கலவை கால்நடை மருத்துவமனைக்குத்தான் இவர்கள் செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஒரு நாள் வேலையையே அவர்கள் இழக்கும் நிலை உள்ளது. மேற்கண்ட ஊர்களின் மையப்பகுதியில் சென்னசமுத்திரம் அமைந்துள்ளது. அங்கு கால்நடை மருத்துவமனை அமைத்தால் மேற்கண்ட பகுதி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட கால்நடை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சென்னசமுத்திரம் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story

