தக்கோலம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து!

X
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் இயங்கிவரும் கார் தொழிற்சாலைக்கு ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். அவர்கள் கம்பெனி வேனில் அழைத்து செல்லப்படுகிறார்கள். அதன்படி நெமிலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நேற்று கார் தொழிற்சாலைக்கு பெண் தொழிலாளர்களை வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். தக்கோலம் அருகே பூந்தமல்லி சாலையில் உள்ள தரைப்பாலம் பகுதியில் சென்ற போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 18 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர். இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

