அரக்கோணம் ரயில் டிக்கெட் பரிசோதகர் தூக்கிட்டு தற்கொலை

X
அரக்கோணம் அசோக் நகர் பகுதியில் சேர்ந்தவர் உதயகுமார் 36 இவர் ரயில்வேயில் டி.டி.இ.யாக வேலை செய்து வந்தார். தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பல லட்சம் பணத்தை இழந்ததால், கடன் தொல்லையில் இருந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

