எட்டு அடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார்.
மதுரை விமான நிலையத்திற்கு நாளை (ஏப்.6) மாலை பிரதமர் மோடி வருகை தருகிறார்.மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் விமான நிலைய வெளி வளாகம், சோதனை சாவடி, மண்டேலா நகர், பெருங்குடி வலையன்குளம், மற்றும் சுற்றுச்சாலை சுற்றுப்பகுதிகளில் 2000 போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் மூன்று அடுக்குகளாக ஈடுபட்டு வருகின்றனர். மதுரை விமான நிலையத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் போலீசார் எட்டடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி வருகை ஒட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன்கள் பறக்க மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை வரும் பிரதமரை எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story




