தமிழக ஆளுநர் மதுரை வருகை.

X
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நாளை (ஏப்.6)புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் இரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று( ஏப்.5) இரவு சென்னையிலிருந்து விமானம் மூலமாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் மதுரை வருகிறார். மதுரையிலிருந்து ராமநாதபுரம் விருந்தினர் மாளிகைக்கு சாலை மார்க்கமாக செல்கிறார். நாளை புதிய பாலம் திறப்பு விழா நிறைவு பெற்ற பிறகு நாளை மாலை 6 மணி அளவில் சென்னைக்கு விமானம் மூலம் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் புறப்பட்டு செல்கிறார்.
Next Story

