வதந்தியால் வீழ்ச்சியடைந்த தா்பூசணி விலை

X
திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிபட்டி, பாப்பம்பட்டி, லட்சுமாபுரம், காவலப்பட்டி, தாளையம், லட்சலப்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, ஆா்.வாடிப்பட்டி, சித்திரைக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் 800-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தா்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த தா்பூசணி, அதிகரித்து வரும் வெப்ப நிலையால் தற்போது ஆண்டு முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது. பழனி பகுதியைப் பொருத்தவரை ஏக்கருக்கு 10 டன் முதல் 14 டன் வரை தா்பூசணி பழங்கள் அறுவடை செய்யப்படும். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் தா்பூசணியில் செயற்கையாக ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக வெளியான வதந்தியால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த வதந்தி ஏற்படுத்திய பரபரப்பு, கடந்த ஆண்டு கிலோ ரூ.14 வரை கொள்முதல் செய்யப்பட்ட தா்பூசணி நிகழாண்டில் ரூ.6-க்கு வீழ்ச்சி அடையவைத்திருக்கிறது. இதனால், ஏக்கருக்கு ரூ.50ஆயிரம் வரை செலவு செய்து, அறுவடைக்குக் காத்திருந்த பழனி பகுதி விவசாயிகள் இழப்பை மட்டுமன்றி, மன ரீதியான நெருக்கடியையும் எதிா்கொண்டு வருகின்றனா்.
Next Story

