கோவை: தென்னை வளர்ச்சிக்கு இயற்கை கரைசல்!

கோவை: தென்னை வளர்ச்சிக்கு இயற்கை கரைசல்!
X
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள், அன்னூர் வட்டாரத்தில் தென்னை விவசாயிகளுக்கு ஒரு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள், அன்னூர் வட்டாரத்தில் தென்னை விவசாயிகளுக்கு ஒரு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்கள், அன்னூர் அருகே உள்ள கீரனூர் கிராமத்தில் விவசாயிகளுடன் இணைந்து தென்னை மரங்களுக்கான இயற்கை கரைசல்களைத் தயாரித்து நேற்று செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த மாணவர்கள், தென்னை வளர்ச்சிக்கு உதவும் ஏழு வகையான கரைசல்களான மீன் அமிலம், தேமோர் கரைசல், எலுமிச்சை கரைசல், ஜீவாமிர்தம், தேமோர்கரைசல், பஞ்சகாவ்யம் மற்றும் 5 இலை கரைசல் ஆகியவற்றைத் தயாரிக்கும் முறையை விவசாயிகளுக்கு விளக்கிக் காட்டினர். குறிப்பாக, தென்னைக்குத் தேவையான சத்துக்களை வேர் மூலம் செலுத்துவதால் தேங்காய் பிடிப்பு அதிகரிப்பதுடன், குருத்துப்புழு தாக்குதல் குறைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், ஒரு லிட்டர் தென்னை டானிக் கரைசலை 4 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு மரத்திற்கு 200 மில்லி வீதம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். இந்த கரைசல்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதையும் மாணவர்கள் எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில், தென்னையில் மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரிப்பது பற்றிய தகவல்களையும் மாணவர்கள் விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
Next Story