அழிந்து வரும் அரியவகை மலபார் அணில்கள்

அழிந்து வரும் அரியவகை மலபார் அணில்கள்
X
கொடைக்கானலில் அழிந்து வரும் அரியவகை மலபார் அணில்கள்
கொடைக்கானல் மலைப்பகுதியை பொறுத்தவரையில் 60 சதவீத பகுதிகள், வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதிகளில் அரியவகை விலங்கினங்களும், பறவை இனங்களும் உள்ளன. இந்தநிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் பறவை அணில் என்று அழைக்கப்படும் அரியவகை மலபார் அணில்கள் உள்ளன. இவை ஆங்காங்கே மட்டும் தென்பட்டு வந்தது. இதற்கிடையே தற்போது மலபார் அணில்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதிகளான வெள்ளி நீர்வீழ்ச்சி, புலிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள‌ மரங்களில் மலபார் அணில்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த அணில்கள் சோலை மரங்களில் இருக்கும் கொட்டாப்பழம், ஜாமூன் பழங்களை உண்டு வாழ்ந்து வருகின்றன. மேலும் சோலை மரங்களில் இருந்து பழங்களை மலபார் அணில்கள் உண்பதால், அதன் எச்சம் மூலமாக மீண்டும் வனப்பகுதியை உருவாக்குகின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, மலபார் அணில்களை, சாதாரணமாக சாலை ஓர நீர் நிலைகளில், எளிதாக காணமுடிந்த நிலை மாறி, தற்பொழுது சில ஆண்டுகளாக, அதனை காண்பதே அரிதாக உள்ளதாகவும் இயற்கை ஆர்வலர்கள் கவலை கூறுகின்றனர். இந்த நிலையை போக்க மலைப்பகுதிகளில் அடர்ந்து பரவியுள்ள அன்னிய மர காடுகளை, முற்றிலும் அழித்து, இயற்கையான புல்வெளிகளையும், சோலைக்காடுகளையும் திரும்ப உருவாக்க வேண்டும் என்பது, நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
Next Story