சென்னிமலை கோவில்மலைப்பாதை ரோடு போடும் பணி தீவிரம்

சென்னிமலை கோவில்மலைப்பாதை ரோடு போடும் பணி தீவிரம்
X
சென்னிமலை முருகன் கோவிலில் வனத்துறை மூலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலைப்பாதை சீரமைப்பு பணி நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.
சென்னிமலை முருகன் கோவிலில் வனத்துறை மூலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலைப்பாதை சீரமைப்பு பணி நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.‌ சென்னிமலை முருகன் கோவிலில் ரூ.6 கோடியே 70 லட்சம் மதிப்பில் மலைப்பாதை சீரமைக்கும் பணியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந் தேதி சென்னையில் இருந்து காணொளி காட்சி முதல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சீரமைப்பு பணிக்காக மலைப்பாதையில் தாவரங்கள் அகற்றப்பட்டதாக கூறி கடந்த 15 தினங்களுக்கு முன்பு சீரமைப்பு பணியை வனத்துறையினர் நிறுத்தி இருந்தனர். பின்னர் அது சம்பந்தமான ஆவணங்களுடன் நேரில் ஆஜராக ஈரோடு வனச்சரக அலுவலகம் மூலம் சென்னிமலை கோவில் செயல் அலுவலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன் பேரில் சென்னிமலை கோவில் நிர்வாகத்தினர் ஈரோடு வனச்சரக அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்கள். அப்போது இரு தரப்பு அதிகாரிகளுக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் நேற்று முதல் சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதை சீரமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது. இதற்காக மீண்டும் பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டது.‌ இனி விரைவில் சீரமைப்பு பணிகள் செய்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story