முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பொதுமக்கள் இணைந்து

முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பொதுமக்கள் இணைந்து
X
புறாக்கிராமம் கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.1.20 லட்சம் கல்வி சீர்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கல்வி சீர் வழங்கும் விழா, இலக்கிய மன்ற விழா, விளையாட்டு விழா, மாணவர்கள் சேர்க்கை, ஆண்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, வட்டாரக் கல்வி அலுவலர் ரவி தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயந்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாஜிகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் புவனராணி வரவேற்றார். விழாவில், விளையாட்டு போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். விழாவில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம், மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஜமாத்தார்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பொதுமக்கள் இணைந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான கல்வி சீரை பள்ளிக்கு வழங்கினர். முடிவில், ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
Next Story