கைதான மச்சான் பரபரப்பு வாக்குமூலம்

கைதான மச்சான் பரபரப்பு வாக்குமூலம்
X
பர்கூர் வனப்பகுதியில் எரிந்த நிலையில் வாலிபர் எலும்புக்கூடு கண்டெடுப்பு மனைவியுடன் தொடர்பு வைத்ததால் எரித்து கொன்றேன்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, சின்னக்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (25). இவர் அதே ஊரைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் (22) என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டருக்கும் மேற்பட்ட பிரச்சனையில் பாப்பம்மா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவருடன் சக்திவேலும் சென்று விட்டார். இந்நிலையில் சக்திவேலின் மச்சான் வெங்கடேஷ், உறவினர் ராஜேந்திரன், குமார் ஆகியோருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் பர்கூர்மலையில் உள்ள தட்டக்கரை, வனச்சரகம் போதமலை எம்மம்பட்டி பகுதிக்கு சந்தன மரம் வெட்ட சென்றுள்ளனர். இந்த நிலையில் வெங்கடேஷ், ராஜேந்திரன், குமார் ஆகி 3 பேரும் மீண்டும் ஊருக்கு வந்தனர். ஆனால் சக்திவேல் வரவில்லை. இதுகுறித்து சக்திவேல் குடும்பத்தினர் கேட்டபோது வெங்கடேஷ், ராஜேந்திரன், குமார் ஆகியோர் நாங்கள் பர்கூர் வனப்பகுதியில் மரம் வெட்டி கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு ஆளுக்கு ஒரு திசையில் ஓடி வந்து விட்டோம் என்றனர்.இதையடுத்து சக்திவேலின் தந்தை மகன் மாயமானது குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து சக்திவேல் தந்தை ஈரோடு மாவட்டம் பர்கூர் போலீஸ் நிலையத்திற்கும் வந்து தனது மகன் சக்திவேல் மாயமானது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மரம் வெட்ட சென்ற இடமான தட்டக்கரை வனப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் சக்திவேல் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தட்டக்கரை பகுதியிலிருந்து ஒன்னரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எம்மம்பட்டி வனப்பகுதியில் உள்ள ஒரு குட்டையில் மனித தலை மற்றும் எலும்பு கூடு இருப்பதை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த இடத்தில் பேண்ட் பெல்ட் பக்கில்ஸ் இருந்ததை போலீசார் கைப்பற்றினார். இதுகுறித்து சக்திவேலின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பெல்ட் பக்கில்ஸ் வைத்து இறந்து கிடந்தது தங்கள் மகன் சக்திவேல் என்பதை உறுதி செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சக்திவேல் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து அவருடன் சென்ற ராஜேந்திரன், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறும்போது, காதல் திருமணம் செய்த சக்திவேல் மனைவி பாப்பம்மாவின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது வெங்கடேசன் மனைவியுடன் சக்திவேல் பழகி வந்துள்ளார். இதை அறிந்த வெங்கடேஷ் தனது மனைவியுடன் பழகுவதை கைவிடுமாறு சக்திவேலிடம் கூறியுள்ளார். ஆனாலும் சக்திவேல் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் மச்சான் சக்திவேலை தீர்த்துகட்ட திட்டம் போட்டார். அதன்படி மரம் வெட்ட செல்லலாம் என சக்திவேலை வெங்கடேஷ் அழைத்து சென்றார். அவருடன் உறவினர்கள் ராஜேந்திரன், குமார் ஆகியோரும் சென்றனர்.அப்போது அந்தியூர் வனப் பகுதிக்கு அழைத்து சென்று வெங்கடேஷ் அருவாளால் சக்திவேலை வெட்டிக்கொண்டு உடலை தீ வைத்து எரித்துள்ளார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் மீண்டும் ஊருக்கு வந்துள்ளனர். போலீஸ் விசாரணையில் முதலில் வெங்கடேஷ் துப்பாக்கி சத்தம் கேட்டதால் ஆளுக்கு ஒரு திசை வந்துவிட்டோம் என்று கூறினார். ஆனால் சம்பவத்தன்று அது போன்று துப்பாக்கி சூடு நடைபெறவில்லை என வனத்துறையினர் மூலம் உறுதி செய்து கொண்டோம். அதன் பின்னர் வெங்கடேஷிடம் மேற்கொண்ட விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார் என்றனர். இது எடுத்து வெங்கடேஷ் மற்றும் ராஜேந்திரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக குமார் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தனிமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆந்திரா விரைந்துள்ளனர்.
Next Story