போக்குவரத்து விதிமீறல் வாகன ஓட்டிகள் மீது வழக்கு

போக்குவரத்து விதிமீறல் வாகன ஓட்டிகள் மீது வழக்கு
X
ஈரோடு மாநகரில் கடந்த மார்ச் மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1,835 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு ரூ.6.77 லட்சம் அபராதம் வசூலிப்பு
ஈரோடு மாநகரில் கடந்த மார்ச் மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை ஈரோடு மாநகர பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனைகள் மேற்கொண்டு அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் சார்பில் கடந்த மார்ச் மாதம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்தது. இதில் விதி மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்தனர்.மது போதையில் வாகனம் இயக்கிய 13 நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட 141 வழக்கு, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 932 வழக்குகள், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் இயக்கியதாக 29 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 15 வழக்குகள், வாகன காப்பீடு இல்லாத பிரிவில் 100 வழக்குகள் என மொத்தம் 1,835 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து ரூ.6.77 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர். மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிய 29 பேரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.
Next Story