இருவேறு சம்பவங்களில் இருவர் மரணம்!

இருவேறு சம்பவங்களில் இருவர் மரணம்!
X
தூத்துக்குடியில் இருவேறு சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்தவர் மேரி (69). இவர் கடந்த மாதம் 18ஆம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு சரிந்து இவர் மீது விழுத்ததில் தீப்பிடித்து பலத்த காயமடைந்தாராம். உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து தென்பாகம் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு சம்பவம்: புதியம்புத்தூர் நீராவி மேடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ் மனைவி மகேஸ்வரி(32). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், கணவன்- மனைவி இருவருக்கும் இடையே நகை அடகு வைத்தல் தொடர்பாக தகறாறு ஏற்பட்டதாம். இதனால் மனம் உடைந்த மகேஸ்வரி திடீரென வியாழக்கிழமை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து புதியம்புத்தூர் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story