ஈரோட்டில் எலுமிச்சை பழம் விலை உயர்வு

X
தமிழக முழுவதும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் அதிக அளவில் குளிர்பானங்களை பருகி வருகின்றனர். குறிப்பாக எலுமிச்சம் பழம் தேவை தற்போது அதிகரித்துள்ளது. அது மட்டுமன்றி தொடர்ந்து கோவில்களில் விசேஷம் வருவதால் எலுமிச்சம் பழம் தேவை மேலும் அதிகரித்து வருகிறது. ஈரோடு வ உ சி பெரிய மார்க்கெட்டில் திருச்சி புதுக்கோட்டை புளியங்குடி திண்டுக்கல் ஆந்திரா பெங்களூர் திருச்செங்கோடு சங்ககிரி போன்ற பகுதிகளில் இருந்து எலுமிச்சம்பழம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தற்போது கோடை காலம் தொடங்க உள்ளதால் வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சம் பழம் தேவை அதிகரிப்பால் வரத்தும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தை விட இன்று அதிகளவில் எலுமிச்சம் பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. வரத்து அதிகரிப்பால் விலையும் உயர்ந்து உள்ளது இன்று மார்க்கெட்டில் ஒரு எலுமிச்சம்பழம் ரூ.3 முதல் ரூ.6 வரை அளவைப் பொறுத்து விலை உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது. இன்னும் கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வருடம் கோடை காலத்தில் ஒரு எலுமிச்சம் பழம் ரூ.12 வரை விற்பனையானது. தற்போது வரத்து அதிகரித்து விலை உயர்ந்தாலும் எலுமிச்சம்பழம் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story

