கோவை: மாநகர் மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கிய மழை !

கோவை:  மாநகர் மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கிய மழை !
X
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கோவையில் பிப்ரவரி மாத மத்தியில் இருந்தே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று மதியம் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளான அவிநாசி சாலை, காந்திபுரம், கணபதி, உக்கடம், டவுன்ஹால், சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி, சிவானந்தா காலனி, மணியக்காரன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் லேசான இடியுடன் மழை பெய்தது. குறிப்பாக சுந்தராபுரம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதேபோல், கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான சூலூர், பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, எட்டிமடை உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்தது. கடும் வெயிலால் அவதியுற்று வந்த கோவை மக்கள், திடீரென பெய்த இந்த மழையினால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Next Story