கோவை: ரயில் மூலம் போதை மாத்திரைகள் கடத்திய கும்பல் கைது!

கோவை: ரயில் மூலம் போதை மாத்திரைகள் கடத்திய கும்பல் கைது!
X
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி, ரயில் மூலம் பார்சல் செய்து கோவைக்கு கடத்தி வந்து விற்பனை செய்து வந்த 4 பேர் கைது.
கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிஷோர் (27), தினேஷ் (25), அஜய் பெலிக்ஸ் (25) மற்றும் ரத்தினபுரி சூர்யா (19) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், விற்பனைக்காக போதை மாத்திரைகளை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 1,556 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு 4 லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி, ரயில் மூலம் பார்சல் செய்து கோவைக்கு கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
Next Story