பி.எஸ்.என்.எல்., அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

X
கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல்., மற்றும் அஞ்சல்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தின் முன்பு பி.எஸ்.என்.எல். மற்றும் தபால் துறையில் ஓய்வுபெற்ற ஊழியர்களின் சங்கங்கள் சார்பில் ஓய்வூதியர்கள் 8வது சம்பள கமிஷனில் கடந்த காலங்கள் போல் பயன் பெற இயலாது என்று மாற்றி அமைக்க பெற்ற பைனான்ஸ் பில்லை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.எஸ்.என்,எல். ஓய்வூதிய சங்க தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் போஸ்டல் சங்க தலைவர் வீரண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். AIPEU கோட்ட சங்க செயலாளர்கள் அருள் ராஜன், கண்ணன், பி.எஸ்.என்,எல். சங்க செயலாளர் மகேந்திர மணி, AIPRPA உதவி தலைவர். சுப்பையா, AIPRPA கோட்ட செயலர் தவமணி ஆகியோர் பேசினர். முடிவில் AIPRPA பொருளாளர் தர்மராஜன் நன்றி கூறினார்.
Next Story

