சேலம் பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்த கட்டிடம் கேட்டு

சேலம் பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்த கட்டிடம் கேட்டு
X
அருள் எம்எல்ஏ முதல்வரிடம் மனு
தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, அருள் எம்.எல்.ஏ சந்தித்து பேசினார். அப்போது தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஆனால் சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையம் புதிய பஸ் நிலைய வணிக வளாகத்தில் 3 கடைகளை சேர்த்து இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் பெண் போலீசார்கள் உடை மாற்றுதல், கழிவறைக்கான போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி சிரமப்பட்டு வருவதால், புதிய போலீஸ் நிலையம் அமைத்துத்தர வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை அதிகரிக்கவும் மீண்டும் நியமனத்தேர்வு நடத்தாமல் ஏற்கனவே நியமனத்தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்ப வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரிக்கான உதவி பேராசிரியர், உதவி நூலகர், உதவி உடற்கல்வி இயக்குனர்கள் ஆகிய பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு கணினி வழியில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடக்கிறது. இதற்கான அறிவிப்பானது தமிழ் பாடத்திட்டம் இல்லாமல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story