சந்தைப்பேட்டை கோவிலில் கும்பாபிஷேகம்.

மதுரை மேலூர் சந்தைப்பேட்டை கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் மேலூர் பெரியகடை வீதி சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா 4-ம் தேதி நடைபெற்றது. 3-ம் தேதி மாலை மங்கள இசையுடன் கெங்கா பூஜை, விக்னேஸ்வரா பூஜை, தன பூஜை, முதல் கால யாக பூஜை, ஏழு வகையான ஹோமங்கள், யந்திரபிரதிதிருஷ்டை செய்தல், மருந்து சாத்துதல், கண் திறந்தல் நடைபெற்றது. காலை 4-ம் தேதி இரண்டாம் கால யாகசாலா பூஜை, கோ பூஜை திரிகண்டாதி, ஏழு வகையான ஹோமங்கள், மங்கள இசையுடன் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் இருந்து புனித நீரினை சிவாச்சாரியார் தலைமையில் காப்பு கட்டிய பக்தர்கள் கோவிலை சுற்றி வந்தனர். சிவாச்சிரியார்கள் வேத மந்திரம் முழங்க அப்போது வானத்தில் கருட பகவான் வட்டமிட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். புனித நீரினை கும்பத்தில் ஊற்றி மஹா கும்பாபிஷேக வெகு தெரு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மனுக்கு விசேஷ தீபாரணை நடைபெற்றது. பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் விழாகுழுவினர் வழங்கினர். சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தகோடிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story