"என் கல்லூரி கனவு" விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான “என் கல்லூரி கனவு” விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பில் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்விக்கு சரியான வழியை ஏற்படுத்தித்தருவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இத்துறையின் மூலம் சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வருகை தந்துள்ளனர்.
Next Story

